my images
VALALAI RURAL DEVELOPMENT SOCIETY
Idaikkadu Maha Vidhiyalaya Old Students Association - Canada
IDAIKKADU OLD STUDENTS 2014
SWISS IDAIKKADU VALALAI GET TOGETHER
Idaikkadu Valalai Welfair Association - UK

April 25, 2015

my Image
வளலாய் கிராம அபிவிருத்திச்சங்க குழுத் தெரிவு

வளலாய் கிராமத்திலுள்ள மக்கள் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவ நடவடிக்கை காரணமாக தமது சொத்துக்களையும் வீடுகளையும் இழந்து இடம்பெயர்ந்தமை குறிப்பிடத்தக்கது. இக்கிராமமானது. வளலாய் கிழக்கு, மேற்கு, வடக்கு எனும் பிரிவுகளை உள்ளடக்கிய 1350 குடும்பங்களின் சுமார் 5000 பேர்களைக் கொண்ட கிராமம். இக்கிராமம் மக்களின் ஒரு தொகுதியினர் அதாவது வளலாய் கிழக்குப்பகுதியைச் சேர்ந்த 450 குடும்பங்கள் 1997 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மீள்குடியேற்றப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதோடு ஏனைய பிரதேசங்கள் நீண்டகாலமாக உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடணப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சுமார் 21 வருடங்களுக்கு பின்னர் 2011.11.29 ஆம் திகதி வளலாய் மேற்கின் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டதோடு மீண்டும் 2015.03.13 ஆம் திகதி 25 வருடங்களுக்கு பின் வளலாய் மேற்கின் மிகுதிப்பகுதியும் வடக்குப்பகுதியும் மீள்குடியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வளலாய் மேற்கு வடக்கு பகுதியை நோக்குகின்றபோது மக்களின் குடியிருப்புக்கள் முற்று முழுதாக அழிக்கப்பட்டு காடுகளும் பற்றைகளும் நிறைந்த பிரதேசமாக காட்சியளித்ததோடு மிதிவெடி அபாயமுடையதாகவும் காணப்பட்டது. இக்கிராம மக்களின் ஜீவனோபாய தொழிலாக விவசாயம் மீன்பிடி கூலித்தொழில் என்பனவாக உள்ளன. இதுவரை தன்னார்வ தொண்டு நிறுவனங்களாலும் அரச நிறுவனங்களினாலும் சில வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் இக்கிராமம் அபிவிருத்தியை வேண்டி நிற்பது குறிப்பிடத்தக்கது.

2013ஆம் ஆண்டு காலப்பகுதியில் திட்டத்தின்கீழ் 123 வீடுகள் வழங்கப்பட்டன. இதில் வளலாய் கிழக்குப்பகுதியில் 88 வீடுகளும் வளலாய் மேற்ககில் 35 வீடுகளும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் வளலாய் மேற்கில் 60 குடும்பங்களும் வளலாய் வடக்கில் 140 குடும்பங்களும் மீளக் குடியேறுவதற்கான பதிவுகளை மேற்கொண்டுள்ளன. இக்கிராமத்தின் அபிவிருத்தித்திட்டத்தினை சிறந்த முறையில் ஒழுங்கமைத்து நடைமுறைப்படுத்துவதற்கு பலமான ஒரு அமைப்பு அவசியமாக உள்ளதனால் இக்கிராமத்தின் பழம்பெரும் அமைப்பாக காணப்படுகின்ற வளலாய் கிராம அபிவிருத்திச் சங்கத்தினை மீள உயிர்ப்பிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 18.04.2015 அன்று வலிகாமம் கிழக்கு கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், வளலாய் கிராம அலுவலர் திரு ச. சாந்தரூபன் வளலாய் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி பார்த்தீபன் கவிநாயகி ஆகியோர் முன்னிலையில் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது. தெரிவு செய்யப்பட்ட நிர்வாக உறுப்பினர்கள்:-

1. தலைவர்:- திரு செல்லையா தங்கராசா
2. செயலாளர்:- திரு செல்லத்தம்பி சுதன்
3. உப தலைவர்:- திரு பவுலின் அப்பு எட்வேட் உதயகுமார்
4. உப செயலாளர்:- திரு பஸ்தியாம்பிள்ளை செல்வரத்தினம்
5. பொருளாளர்:- திரு செல்லப்பு துரைரத்தினம்
6. செயற்குழு உறுப்பினர்கள்
1. திரு ந. மகேந்திரம்
2. திரு நா. தவகுமார்
3. திரு செ. மோகனதாஸ்
4. திரு ம. ரமேஸ்
5. திருமதி மேரி புஸ்பராணி
6. திரு சி. செல்வரத்தினம்
7. திரு மா. சயேந்திரம்

8. கணக்காய்வாளர்:- திரு வயிரமுத்து கந்தசாமி (ஓய்வுபெற்ற உள்@ராட்சி ஆணையாளர்)
9. போசகர் :- திரு சாந்தரூபன்
10. இணைப்பாளர் :- திருமதி பார்தீபன் கவிநாயகி

தெரிவு இடம்பெற்றதன் பின்பு புதிய நிர்வாகத்தின் மூலம் இக்கிராமத்தின் அவசிய தேவைகளாக குறிப்பிடப்பட்ட விடயங்கள்

  • பெருமளவு கிணறுகள் தூர்வடைந்த நிலையில் உள்ளமையால் தேவைக்காக நீரைப் பெற்றுக்கொள்வதில் பாரிய இடர்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே இக்கிணறுகளை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

  • வீதிகள் போக்குவரத்தினை மேற்கொள்ளமுடியாத நிலையில் சிதைவடைந்து காணப்படுகின்றமையினால் வீதியை புனரமைக்க வேண்டியுள்ளமை.

  • தங்கி நின்று காணிகளை துப்பரவு செய்வதற்கு தற்காலிக கொட்டகைகளை அமைத்தல்

  • மலசலகூடங்கள் அமைக்கவேண்டியுள்ளமை.

  • குடியிருப்புக்காணிகளில் மண் அணைகள் பதுங்குகுழிகள் காணப்படுவதால் அதனை அகற்றவேண்டியுள்ளமை

  • கிராமத்திற்கு சென்றுவருவதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தல்

  • காணிகளை எல்லைப்படுத்த அரச நில அளவையாளரின் உதவியைப் பெறல்

  • கடற்தொழிலை மேற்கொள்வதற்கு ஏதுவாக கடலுக்கு படகுகளை கொண்டு செல்வதற்கு வான் (கால்வாய்) அமைத்தல்


போன்ற உடனடி அபிவிருத்தி தேவைகள் செய்யப்படவேண்டியுள்ளதால் எமது அமைப்பினூடாக வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

முகப்பு